• October 5, 2025
  • NewsEditor
  • 0

விடுமுறை காரணமாக சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்கு ஹோட்டல் அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களை வற்புறுத்தி தவறாக நடந்து கொண்டு, கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஆண்களுக்கு தலா 5.1 ஆண்டுகள் சிறையும், 12 பிரம்படிகளும் தண்டனைகளாக விதிக்கப்பட்டன.

இந்தியாவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, ராஜேந்திரன் ஆகியோர் ஏப்ரல் 24 ஆம் தேதி விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்ததாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது, ​​அடையாளம் தெரியாத ஒருவர் அவர்களை அணுகி, `பாலியல் சேவைகளுக்காக பெண்களை சந்திக்க ஆர்வமாக உள்ளீர்களா?’ என்று கேட்டதுடன்,

அந்த இரண்டு பெண்களின் தொடர்புத் தகவலையும் அவர்களுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

உடனே ஆரோக்கியா, ராஜேந்திரனிடம், “எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு ஹோட்டல் அறைக்கு வரவழைத்து கொள்ளையடிக்கலாம்” எனக் கூறியிருக்கிறார். அதற்கு, ராஜேந்திரனும் ஒப்புக்கொண்டார். அன்று மாலை 6 மணியளவில் ஹோட்டல் அறையில் அப்பெண்ணைச் சந்திக்க அவர்கள் ஏற்பாடு செய்தனர்.

அறைக்குள் நுழைந்ததும், அவர்கள் அப்பெண்ணின் கைகளையும், கால்களையும் துணியால் கட்டி, அடித்து துன்புறுத்தி, அப்பெண்ணின் நகைகள், 2,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், பாஸ்போர்ட் மற்றும் வங்கி அட்டைகளைக் கொள்ளையடித்தார்கள். அன்று இரவே 11 மணியளவில், இரண்டாவது பெண்ணுடன் வேறொரு ஹோட்டலில் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அப்பெண் வந்ததும், அவரின் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றனர், ராஜேந்திரன் அப்பெண் கூச்சலிடுவதைத் தடுக்க வாயைப் பொத்தினார். அப்பெண்ணிடம் இருந்த 800 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் அவரது பாஸ்போர்ட்டைத் திருடி, அவர்கள் திரும்பி வரும் வரை அறையை விட்டு வெளியேறக் கூடாது என்று மிரட்டினர் .

ஆனால், அப்பெண் மறுநாள் வேறொருவரிடம் ரகசியமாகப் பேசியபோது, ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனின் இச்செயல்கள் அம்பலமானதுடன், காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதன்பின் நீதிபதியின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறைப்பு நடவடிக்கையின் போது,​​ பிரதிநிதித்துவம் இல்லாத இருவரும், நீதிபதியிடம் கருணை மற்றும் இலகுவான தண்டனையை வழங்குமாறு மன்றாடியுள்ளனர்.

” என் தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், அவர்களில் ஒருவர் திருமணமானவர், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் நாங்கள் இதைச் செய்தோம்” என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் பேசிய ஆரோக்கியசாமி கூறினார். ” என் மனைவியும் குழந்தையும் இந்தியாவில் தனியாக இருக்கிறார்கள், அவர்கள் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ராஜேந்திரன் கூறினார்.

மேலும், 23 வயதான ஆரோக்கியசாமி டெய்சன் மற்றும் 27 வயதான ராஜேந்திரன் மயிலரசன் ஆகியோர் விடுமுறை காரணமாக சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்கு இரண்டு பாலியல் தொழிலாளர்களை வற்புறுத்தி தவறாக நடந்து கொண்டதுடன் , அவர்களை தானாக முன்வந்து தாக்கி உடமைகளைக் கொள்ளையடித்ததாக தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும், பிரம்படிகளும் சிறை காவல் தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *