
சென்னை: “தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று இருந்தால், நீதிமன்றம் கூட இவ்வளவு கண்டனம் தெரிவித்திருக்காது. கரூர் சம்பவத்தில் இபிஎஸ் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கரூரில் நடந்தது விபத்துதான். தவெக நிர்வாகிகளுக்கு போதிய அனுபவம் இல்லை. அவர்கள் வேண்டுமென்றே எதையும் செய்திருக்க வாய்ப்பில்லை. எந்த தலைவரும் சொந்தக் கட்சித் தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்ற முதல்வரின் கருத்து சரிதான். முதல்வர் யதார்த்தத்தை கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று இருந்தால், நீதிமன்றம் கூட இவ்வளவு கண்டனம் தெரிவித்திருக்காது.