
தூத்துக்குடி: ‘கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் எப்படி பாதுகாத்திடுவது என்பது குறித்து தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்துகிறோம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை திருச்செந்தூர் அமலி நகர் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மீனவர்களது படகில் சீமான் நடுக்கடலுக்கு சென்று பார்வையிட்டார்.