• October 4, 2025
  • NewsEditor
  • 0

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 12-வது சீசன் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கிறது. பலரும் சிம்ரன் சர்மாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிம்ரன் சர்மா

சிம்ரன் சர்மா உத்தர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்தவர். குழந்தைப் பருவத்தில் தனது பார்வையை இழந்திருந்தாலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான தனது தேடலை அவர் கைவிடவில்லை.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிம்ரன் சர்மா ஆரம்ப காலகட்டத்தில் பொருளாதாரப் பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

ஆனால் அவரது வாழ்க்கை திருமணத்திற்குப் பிறகு சிறப்பான ஒன்றாக மாறியிருக்கிறது.

கணவர் கஜேந்திர சிங், சிம்ரன் சர்மாவின் கனவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்துகொடுத்திருக்கிறார்.

தனக்குச் சொந்தமான நிலத்தை விற்று மனைவியின் பயிற்சிக்கு உதவி இருக்கிறார்.

சிம்ரன் சர்மா
சிம்ரன் சர்மா

வெளிப்புற மன அழுத்தங்களில் இருந்தும் அவரை பாதுகாத்திருக்கிறார். இந்நிலையில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று தனது கணவரையும், நாட்டையும் பெருமைடைய செய்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *