• October 4, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வகையில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், இந்த ஊர்களின் பெருமைகளைப் பற்றி பேசுவதற்கு இடமும், காலமும் போதாது. இயற்கை வளங்கள் குவிந்துகிடக்கும் ஊர் என்பதால், கலாசாரத்தில் மிகச் சிறந்து விளங்கும் நகரங்களாக உள்ளன தென் மாவட்டங்களில் பல ஊர்கள்.

நெல்லை

தமிழ்நாட்டில் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் சரி, கோவையைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் சரி, ஏற்கெனவே ஓரளவு நன்கு வளர்ந்த மாவட்டங்களாக உள்ளன. ஆனால், தென் மாவட்டங்கள் இப்போது அதிவேகமாக வளர்ந்து வருகின்றன.

இன்றைக்கு தூத்துக்குடி என்பது இந்தியாவின்
முக்கியமான துறைமுகமாக உள்ளது. அதே போல, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் விவசாயம் சார்ந்த பல தொழில்கள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியானது  பிற மாவட்டங்களுடன் போட்டி
போட்டு வளரக்கூடிய அளவுக்கு சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.  

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

என்றாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது தென் மாவட்ட மக்கள்   இன்னும் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்கவில்லை. தென் மாவட்ட மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்பு இருந்தாலும்  இந்த முதலீடு எப்படிப்பட்டது என்பது தெரியாததால்தான் அவர்கள் இந்த முதலீட்டில் இருந்து சற்று விலகியே இருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றால் என்ன, இதில் முதலீடு செய்தால், நமக்கு எந்த அளவுக்கு லாபம் அல்லது நஷ்டம் கிடைக்க வாய்ப்பு உண்டு, இந்த முதலீட்டில் இறங்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளுக்கும் மியூச்சுவல் ஃபண்ட்
முதலீட்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி புரிந்துகொள்வது அவசியத்திலும் அவசியம்!

சிவகுமார்

இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி  தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல ஒரு ஆன்லைன் மீட்டிங்கை ஏற்பாடு செய்திருக்கிறது ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம்.

செல்வம் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்ட்டின் அடிப்படைகள் என்கிற தலைப்பில் நடக்கவிருக்கும் இந்த மீட்டிங் வருகிற 8-ஆம் தேதி புதன்கிழமை மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஆன்லைன் மீட்டிங் நடக்கப் போகிறது.

இந்த மீட்டிங்கில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொல்லப் போகிறார் குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சென்னை மேலாளர் சிவகுமார்.

பெயர் பதிவு…

இந்த மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், முன்பதிவு செய்துகொள்வது அவசியம். https://forms.gle/zqwD4445PJwyqYpX6 இந்த லிங்க்கை கிளிக் செய்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு இந்த மீட்டிங்கில் கலந்துகொள்ளும் லிங்க் இமெயில் மூலம் அனுப்பப்படும்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, பெரும் செல்வம் சேர்க்கத் தொடங்கும் அரிய வாய்ப்பினை இந்த மீட்டிங்கில் கலந்துகொள்வதன் மூலம் தென் மாவட்ட மக்கள் அனைவரும் பெறலாம்.

இந்த வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதீங்க மக்கா…!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *