
ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் அரிய கருப்பு நிறக் கல் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த கல் கையில் தொடும்போது சாதாரணமாக குளுமையாக இருந்தாலும் அதில் இரும்பு, எஃகு பொருட்களை வைக்கும்போது உருகுவதாக அந்த வீடியோக்களில் காட்டப்படுகிறது.
*अफगानिस्तान के तोरा बोरा पहाड में एक ऐसा पत्थर दरियाफत हुआ है जो ऊपर से ठंडा है लेकिन अगर स्टील या लोहा उस पर रखे तो पिघलता है* pic.twitter.com/JUQaRbrS8N
— A F KHAN (@kabirkhan488_) December 1, 2021
எக்ஸ், பேஸ்புக் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் இந்த கல் குறித்த வீடியோக்கள் பரவி வருகின்றன. பலர் இதை நம்பி கமண்ட் செய்திருக்கின்றனர். ஆனால் இது அறிவியல் பூர்மான வீடியோ அல்ல என்பது தெரியவந்துள்ளது.
அந்த வீடியோ எங்கே முதன்முதலாக பகிரப்பட்டது என்பதைத் தேடினால், www.masralyoum.net- ல் அது பற்றிய கட்டுரைக் கிடைக்கிறது. அதில் சௌதி அரேபியாவில் உள்ள ஜெட்டா வானியல் சமூகத்தின் நிறுவனர் எம். மஜித் அபு சஹ்ரா, அந்த கல்லில் வைக்கப்படும் ஆணி போன்ற பொருள் இரும்பால் ஆனது அல்ல என்றும் காலியம் என்ற உலோகத்தால் செய்யப்பட்டது என்றும் விளக்கியுள்ளார்.
காலியம் மிகவும் குறைந்த வெப்பநிலையிலேயே (29 டிகிரி செல்சியஸ்) உருகக் கூடியது. சூடான தரையில் வைத்தாலே உருகிவிடும். இதனால் சூரிய ஒளி தரும் வெப்பமே இதை உருக்கியிருக்கும் என்பதை அறியமுடிகிறது.
இந்த வீடியோ பரவுவது இது முதன்முறை அல்ல, 7 ஆண்டுகளுக்கு முன்பே ஏபிசி செய்திதளம் இதுகுறித்து விளக்கமாக செய்தி வெளியிட்டிருக்கிறது.
காலியம் போன்ற உலோகத்தை உருக்க மனித உடலின் சூடே போதுமானதாக இருக்கும். ஆனால் அதன் கொதிநிலையை அடைய அதிகப்படியான வெப்பம் (2400 டிகிரி செல்சியல் வரை) தேவைப்படும்.
அறை வெப்பநிலையில் காலியம் போன்ற பாதரசம், சீசியம் மற்றும் ரூபிடியம் போன்ற உலோகங்களும் உருகிய நிலையிலேயே இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இவற்றை வெப்பமானிகளில் பயன்படுத்துகின்றனர்.
எனவே, இந்த வீடியோ வைரலாக பரவ காரணம் மந்திரக் கல் அல்ல, அதில் வைக்கப்படும் உலோகத்தின் தன்மையே!