• October 4, 2025
  • NewsEditor
  • 0

ஜப்பானில் புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாகி வருகிறது.

பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அல்லது வாங்கும் போது அதன் வசதி, பாதுகாப்பு, பக்கத்தில் ஏதேனும் கடைகள் இருக்கிறதா என்பதை பற்றி விசாரிப்போம். ஆனால் ஜப்பானில் ஒரு வினோத நடைமுறை பின்பற்றபட்டு வருகிறது.

அதாவது வாங்கவிருக்கும் வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்னர் அந்த வீட்டை வாங்குகின்றனர்.

Japan Property Exorcism

அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படும் வீடுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் அதனை வாங்க விரும்புகின்றனர். அப்படி ஏதேனும் அமானுஷ்ய சக்தி இருந்தால் அதற்கென சடங்குகளை செய்த பின்னர் அந்த வீட்டை வாங்குகின்றனர்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, இவ்வாறு எதிர்மறையான வைப்ரேஷன் இருக்கும் வீடுகளை விற்கும் போது அதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையின் சட்டம் சொல்கிறது. இவ்வாறு வெளிப்படை தன்மையுடன் விற்கப்படும் வீடுகளின் விலை மார்க்கெட் விலையை விட 10 முதல் 20 சதவீதம் வரை குறைவாக இருக்குமாம். இதனால் மக்கள் அதனை வாங்க விரும்புகின்றனர்.

இதையே ஒரு தொழிலாக மாற்றியுள்ளது ஒரு நிறுவனம். ஜப்பானிய நிறுவனமான கச்சிமோட், 196க்கும் மேற்பட்ட பேய் சொத்துக்களை ஆய்வு செய்துள்ளது. பேய் இருப்பதாக சந்தேகப்படும் வீடுகளை ஆய்வு செய்து வருகிறது இந்த நிறுவனம்.

ஆய்வு முடிந்ததும் அந்த நிறுவனம் எந்த அமானுஷ்ய நிகழ்வுகளும் இல்லை என்பதை உறுதி செய்து அதற்கான சான்றிதழையும் குத்தகைக்காரர்களிடம் வழங்குகிறது.

இந்த தனித்துவமான சேவைக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உயர்ந்து வரும் சொத்து விலைகள் காரணமாக குறைந்த விலையில் கிடைக்கும் இந்த வீட்டை வாங்குவதற்கு சில முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *