
சென்னை: “தவெக தலைவர் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தம்பி விஜய் கரூருக்கு வருவதால் தான் இந்த கூட்டம் வருகிறது. இந்த கூட்டத்துக்கு அவரின் வரவு தான் முக்கியக் காரணம். கரூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்று, நான் வருந்துகிறேன் என விஜய் கூறியிருந்தால் அது முற்று பெற்றிருக்கும். கரூர் சம்பவத்துக்கு அரசு தான் பழியை ஏற்க வேண்டும், காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என சொல்வதில் தான் சிக்கல் உண்டாகிறது.