• October 4, 2025
  • NewsEditor
  • 0

நேற்று மும்பையில் நடந்த சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது மகளுக்கு நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

ஆன்லைனில் அவரது மகள் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த போது, அவரிடம் முகம் தெரியாத நபர் ஒருவர், தவறான புகைப்படத்தைக் கேட்டுள்ளார்.

இன்றைய 5ஜி காலத்தில், தினம் தினம் புதுப்புது விதமாகவும், பல பல விதமாகவும் சைபர் கிரைம்கள் நடந்து வருகின்றன. ஆன்லைன் விளையாட்டுகளில் சைபர் கிரைமில் சிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை…

ஆன்லைன் விளையாட்டு

டௌன்லோடு செய்வதற்கு முன்…

1. ஆன்லைனில் குழந்தைகள் விளையாடும்போது, பெற்றோரின் கவனிப்பு மிக முக்கியம். மேலும், அவர்கள் என்ன மாதிரியான விளையாட்டை விளையாடுகிறார்கள் என்பதை கவனியுங்கள்.

2. முகம் தெரியாத நபர்களுடனான விளையாட்டில், தனிப்பட்ட தகவல்கள் தருவதைத் தவிருங்கள். மேலும், மெசேஜில் எதாவது லிங்க் அல்லது அட்டாச்மென்ட் வந்தால், அதை கிளிக் செய்துவிடாதீர்கள்.

3. அங்கீகரிக்கப்பட்ட வலைதளங்களில் இருந்து மட்டும் எந்த ஆப்பாக இருந்தாலும் டௌன்லோடு செய்யுங்கள்.

கவனம்… கவனம்… கவனம்…

4. உங்கள் விளையாட்டு கணக்குகளுக்கு வலுவான பாஸ்வேர்டுகளை வையுங்கள். கண்டிப்பாக உங்களது பாஸ்வேர்டில் ஒரு அப்பர் கேஸ், ஒரு லோவர் கேஸ், ஒரு எண் மற்றும் ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருப்பதுபோல பார்த்துகொள்ளுங்கள்.

5. நீங்கள் விளையாடும் மொபைல் போன், லேப்டாப், ஆப் என எதுவாக இருந்தாலும், குறிப்பிட்ட இடைவெளிகளில் அப்டேட் செய்துகொள்வது அவசியம்.

6. விளையாட்டில் ஏதேனும் பேமென்ட் செய்ய வேண்டுமானால், பார்த்து கவனமாக செய்யவும். உங்களுடைய வங்கி அல்லது யு.பி.ஐ தரவுகள், ஓ.டி.பி போன்றவற்றை பகிர்வதில் அதிக கவனம் தேவை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *