
தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவதன் பின்னணியில் இருக்கும் கேள்விகளை இந்த நேர்காணலில் எழுப்பும் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன், இது தொடர்பாக சில விளக்கங்களையும் அளித்திருக்கிறார்.