
உத்தராகண்ட்: உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக உள்ள ஆதவ் அர்ஜுனா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான இன்று காலை அங்கு வந்தார். ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுகளை சுட்டிக்காட்டி, “இனி தவெக பிரச்சாரப் பயணம் தொடரும் என நினைக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “நாங்கள் பிரச்சினையை நீதி ரீதியாக அணுகுகிறோம். உண்மையும், நீதியும் நிச்சயம் ஒருநாள் வெளிவரும்.” என்று மட்டும் கூறிச் சென்றார்.