
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
நேற்று மதியம் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.10,900-க்கும், பவுனுக்கு ரூ.87,200-க்கும் விற்பனை ஆனது.
கடந்த மூன்று நாள்களாக, தங்கம் விலை காலை, மதியம் என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறி வருகிறது. அது காலையில் விலை குறைவு, மதியம் விலை உயர்வு என்கிற ரீதியில் இருந்தது.
இதற்கு சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றமே காரணம்.
இந்திய நேரப்படி மதியத்திற்கு மேல்தான், கிட்டத்தட்ட பல சர்வதேச சந்தைகள் தொடங்கும். அப்போது ஏற்படும் விலை மாற்றங்கள் தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.
இந்தியாவின் இரவின் போது, சர்வதேச சந்தைகளில் ப்ராஃபிட் டேக்கிங் நடந்து, தங்கம் விலை குறைந்துவிடுகிறது. அதனால், இந்திய நேரப்படி, காலையில், தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் விலை

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.10,950 ஆக விற்பனை ஆகி வருகிறது.
ஒரு பவுன் தங்கம் விலை

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.87,600 ஆக விற்பனை ஆகி வருகிறது.
வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.165 ஆக விற்பனை ஆகி வருகிறது.