
பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி அறிமுகமாகும் படம், ‘கும்கி 2’. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர்.
“இந்தப் படம், ஓர் இளைஞனுக்கும் ஓர் அற்புதமான யானைக்கும் இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பேசுகிறது. இந்தப் படம் மூலம் அறிமுகமாகும் மதி, கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். யானையுடன் நடிக்கப் பயிற்சி எடுத்துக் கொண்டார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியான காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாக இருந்தாலும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார்” என்று பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.