• October 3, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது புகைப்படம், பெயர் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஏஐ தொழில் நுட்பத்தில் தங்களது புகைப்படத்தைப் பயன்படுத்தி தவறான வீடியோ தயாரிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவர் தொடர்பான வீடியோ, புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

அப்படி இருந்தும் யூடியூப் சானல்களில் ஏஐ மற்றும் டீப்ஃபேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட யூடியூப் சானலுக்கு எதிராக இரண்டு பேரும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரூ.4 கோடி மான நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவோடு சேர்ந்து யூடியூப் மற்றும் சோசியல் மீடியா வீடியோ லின்க்களை இணைத்துள்ளனர்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்

இது போன்ற வீடியோக்கள் பகிரப்படுவதால் மற்றவர்கள் அது போன்ற வீடியோக்களைத் தயாரிக்கின்றனர். ஏஐ மூலம் உண்மையற்ற கற்பனையான வீடியோ தயாரிக்கின்றனர்.

ஏஐ பிளாட்பார்ம் எதிர்மறையான சித்தரிக்கும் வகையில் வீடியோக்களை உருவாக்க வகை செய்கிறது. அவ்வாறு உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகும்போது அத்தகவல்கள் மேலும் பரவுவதற்கு வழி வகுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

யூடியூப் மட்டுமல்லாது கூகுள் நிறுவனத்திற்கு எதிராகவும் இரண்டு பேரும் இம்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் 2 படத்திற்குப் பிறகு புதிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதோடு சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுத் தனித்து வாழ்வதாக செய்தி வந்தது. ஆனால் இப்போது இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து சேர்ந்து வாழ்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *