
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது அதன் ப்ரீக்வலாக `காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் நேற்று( அக்.2) வெளியானது.
ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
`காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘2016-ல் ஒரு ஈவினிங் ஷோவைப் பெறுவதற்கு போராடிக்கொண்டிருந்தேன்.
ஆனால் 2025-ல் 5000-க்கும் மேற்பட்ட ஹவுஸ்ஃபுல் காட்சிகளை அடைந்திருக்கிறோம்.
இந்தப் பயணம் உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் இறைவன் அருளால் மட்டுமே சாத்தியமானது.

இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
காந்தாராவிற்கு முன் ரிஷப் ஷெட்டி, (ரிக்கி)– 2016, கிரிக் பார்ட்டி(2016) சர்காரி ஹி. ப்ரா. சாலே, காசரகோடு, கொடுகே: ராமண்ணா ராய் (2018) போன்ற படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ರಲ್ಲಿ ಒಂದು ಪ್ರದರ್ಶನಕ್ಕಾಗಿ ಒದ್ದಾಡಿದ ದಿನದಿಂದ, 5000ಕ್ಕೂ ಹೆಚ್ಚು
housefull ಶೋಗಳ ಈ ಅದ್ಭುತ ಪಯಣ. ಇದು ಸಾಧ್ಯವಾಗಿದ್ದು ನಿಮ್ಮ ಪ್ರೀತಿ ಮತ್ತು ಬೆಂಬಲದಿಂದ ಮಾತ್ರ. ಇದಕ್ಕಾಗಿ ನಾನು ನಿಮಗೆ ಸದಾ ಋಣಿ.From struggling to get one evening show in 2016 to 5000+ housefull shows in 2025.
This journey is… https://t.co/vuSfaVIAA2— Rishab Shetty (@shetty_rishab) October 2, 2025