கோவை: கோவை, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் நேற்று மாலை காட்டு யானை புகுந்தது. வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில். இந்தக் கோயிலில் அவ்வப்போது காட்டு யானைகள் வருவது வழக்கம். நேற்று மாலை உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை கோயிலுக்குள் புகுந்தது.