
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்2023-ம் ஆண்டு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், கணவர் வீட்டார் தங்களது பெண்ணை வரதட்சணைக்காக கொலை செய்து மறைத்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனை விசாரித்த நீதிமன்றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அசோக் குமார் கூறியதாவது: மணமானதற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து இளம்பெண் காணாமல் போனது குறித்து கணவர் மற்றும் மாமியார் உட்பட 7 பேர் மீது வரதட்சணை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.