• October 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜன​நாயகத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதல்​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். அங்கு உள்ள இஐஏ பல்​கலைக்​கழகத்​தில் மாணவர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில், ராகுல் காந்தி பேசும்​போது, “இந்​தியா உலகத்​துக்கு ஏராள​மான விஷ​யங்​களை செய்ய முடி​யும் என்ற நம்​பிக்கை எனக்கு உள்​ளது. ஆனால், இந்​திய அமைப்​பில் சில பிழைகள் உள்​ளன. அதனை எதிர்​கொள்​வ​தில் இந்​தியா சில சவால்​களை எதிர்​கொள்ள வேண்​டும். குறிப்​பாக, இந்​தி​யா​வில் பல மதங்​கள், மரபு​கள் மற்​றும் மொழிகள் உள்​ளன. ஜனநாயக அமைப்பு அனை​வருக்​கும் இடமளிக்​கும் ஒரு தளமாக செயல்​படு​கிறது. ஆனால் தற்​போது, அந்த ஜனநாயக அமைப்பு பல திசைகளி​லிருந்​தும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வரு​கிறது. இது​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *