
புதுடெல்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் சுமார் 6.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். வரும் 2026-ம் ஆண்டில் 2 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று டிசிஎஸ் அண்மையில் தெரிவித்தது. இதன்படி சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படும். அவர்களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.