
புதுடெல்லி: குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் உள்ள சர் கிரீக் கடல் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி செயல்பட்டால், பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் சர் கிரீக் என்ற நீரிணைப்பு பகுதி உள்ளது. இது இந்தியா – பாகிஸ்தான் இடையே கடல் எல்லைப் போல் உள்ளது. இப்பகுதியின் எல்லைப் பிரச்சினை இரு நாடுகள் இடையே நீண்டகாலமாக உள்ளது. இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா பல முறை முயன்றது. ஆனால் பலன் இல்லை.