
சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு நானி – சுஜித் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.