
கொலம்பியா: “இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார்.
கொலம்பியாவில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இடையிலான உரையாடல் தேவை. அதேபோல, இந்தியாவில் வெவ்வேறு மரபுகள், மதங்கள், கருத்துகளுக்கும் இடம் தேவை. அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஜனநாயக அமைப்புதான். தற்போது, ஆளும் பாஜக அரசில் ஜனநாயக அமைப்பின் மீது முழுமையாக தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்தான் மிகப் பெரிய ஆபத்து.