
சென்னை: செந்தில் பாலாஜியின் கட்டுக்கடங்காத மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல், பண பல தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு சட்டவிரோதமானது. அவரின் கட்டுக்கடங்காத, மக்கள் விரோத செயல்பாடுகளால், கட்டுப்பாடற்ற ஊழல், பண பல, தீய அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என்பதை திராவிட மாடல் அரசின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.