
புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் இந்திராகாந்தி – ராஜீவ்காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரும் 13-ல் அடிக்கல் நாட்டுகிறார்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதிநாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரெங்கும் வாகன நெரிசல் நிலவுகிறது. இதனால் புதுவை மாநில மக்கள் வார இறுதி நாட்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.