
கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் இஸ்ரேல் – காசா போர் நிறுத்தத்திற்கான 20 பரிந்துரைகளை ஒப்புக்கொண்டார்.
ஆனால், அதை இன்னும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.
இஸ்ரேல் எச்சரிக்கை
இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
‘ஹமாஸை தனியாக விட்டுவிட்டு தெற்கு பகுதிக்கு செல்ல நினைக்கும் காசா மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு.
இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.
காசா மக்கள் எங்கே போவார்கள்?
ஹமாஸ் இந்தப் பரிந்துரைகளை ஒப்புக்கொண்டால், காசா மக்கள் காசாவிலேயே வசிக்கலாம் என்று ட்ரம்பின் 20 பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹமாஸிடம் இருந்து இன்னும் பதில் வராத நிலையில், இஸ்ரேல் காசா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கெனவே பல மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துவிட்டனர். இன்னும் சிலர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.
இவர்கள் காசாவை விட்டு நீங்கினாலும், இவர்களுக்கு வேறு பகுதியில் இடம் இருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமே. காரணம், முன்னர் வெளியேறிய மக்கள்களால் அந்த இடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது.
இனி காசாவில் இருப்பவர்கள் அங்கேயே தொடர்ந்தாலும், அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் காத்துள்ளது. இஸ்ரேல் இவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தும்.
இனி இவர்கள் என்ன செய்வார்களோ? உலக நாடுகள் இஸ்ரேலின் இந்த அறிவிப்பிற்கு என்ன எதிர்வினை ஆற்ற உள்ளது?