
தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட நெரிசல்ல எங்கள் நிருபர்களும் இருந்தாங்க. அதன் பிறகு களத்துக்கு போன எங்கள் செய்தியாளர்கள், இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி மக்களை சந்திச்சு பேசியிருக்காங்க. அதை பல காணொளிகளா பதிவு பண்ணி இருக்கோம். முதல்ல, இறந்துபோன 41 பேருக்கும் எங்களுடைய ஆள் மனசுல இருந்து அஞ்சலிய செலுத்துறோம். கரூர் அசம்பாவிதத்தை முழுமையாக observe பண்ணோம் என்கிற அடிப்படையில், இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் மற்றும் தவெக ஆற்றிய எதிர்வினைகள் குறித்து சில கேள்விகள் எங்களுக்கு இருக்கு. அந்த கேள்விகள்தான் இந்த காணொளி. எந்த முன்முடிவும் இல்லாம நாங்க இந்த கேள்விகள முன்வைக்கிறோம்.
