
சென்னை: கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவம் திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக மாநில அரசுக்கு அவர் 12 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (செப்.27) கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா. அந்த குழு நேற்று கரூர் வந்து சம்பவ இடத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது.