
தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு அக். 4-ம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. நடிகர் மோகன் லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது செப்.23-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து மோகன் லாலை கவுரவிக்கும் விதமாக கேரள அரசின் சார்பில் அக். 4-ம் தேதி ‘மலையாளம் வனோலம், லால் சலாம்’ எனும் பெயரில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இதைக் கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வுக்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது. “மலையாள சினிமாவுக்கு நடிகர் மோகன் லால் கடந்த 50 ஆண்டுகளாகச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்” என்று அமைச்சர் சாஜி செரியன் கூறினார்.