• October 1, 2025
  • NewsEditor
  • 0

அறி​முக இயக்​குநர் சுரேஷ் பாரதி இயக்​கி​யுள்ள படம், ‘வீர தமிழச்​சி’. இதில் சஞ்​சீவ் வெங்​கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்​தி, மாரி​முத்​து, வேலராமமூர்த்​தி, கே. ராஜன், மீசை ராஜேந்​திரன், ஜெயம் கோபி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். சங்​கரலிங்​கம் செல்​வகு​மார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இந்​தப் படத்​துக்கு ஜூபின் இசையமைத்​துள்​ளார். மகிழினி கலைக்​கூடம் சார்​பில் சாரதா மணிவண்​ணன், மகிழினி இணைந்து தயாரித்​துள்​ளனர்.

இதன் இசை மற்​றும் முன்​னோட்ட வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர்​கள் ஆர்​.​வி.உதயகு​மார், பேரரசு சிறப்பு விருந்​தினர்​களாகக் கலந்து கொண்​டனர். விழா​வில் இயக்​குநர் சுரேஷ் பாரதி பேசும்​போது, ‘‘கட்​டிடத் தொழிலா​ளி​யாக ரூ.35 சம்​பளத்​தில் வேலை செய்த நான், இன்று இயக்​குந​ராக உயர்ந்​துள்ளேன். 2016-ம் ஆண்டு ‘கொஞ்​சம் கொஞ்​ச​மாக..’ எனும் குறும்படத்தை இயக்​கினேன். அது சிறந்த விழிப்​புணர்வு குறும்​பட​மாகத் தேர்வு செய்​யப்​பட்​டு, தமிழக முதல்​வரிடம் விருது பெற்​றேன். 18 குறும்​படங்​களை இயக்​கி​யுள்ளேன். 36 விருதுகளை வென்​றிருக்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *