• October 1, 2025
  • NewsEditor
  • 0

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்​துள்ள ‘கந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் நாளை வெளி​யாகிறது. இந்​தப் படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடந்​த​போது, ரிஷப் ஷெட்​டி, கன்​னடத்​தில் பேசி​னார். அப்​போது​தான் என் மனதில் இருப்​பதை வெளிப்​படை​யாகப் பேச முடி​யும் என்​றார். இதற்​குத் தெலுங்கு ரசிகர்​கள் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்​து​கொண்டே அவர் பேசாமல் சென்​று​விட்​டார் என்று அவர்​கள் கூறி வரு​கின்​றனர்.

ஏற்​கெனவே பவன் கல்​யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளி​யீட்​டின் போது சில கன்னட அமைப்​பு​கள் பெங்​களூரில் எதிர்ப்​புத் தெரி​வித்​ததை​யும் ஒப்​பிட்​டு, ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தைப் புறக்​கணிப்​போம் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலை ​தளத்​தில் உரு​வாக்​கி​யுள்​ளனர். இது டிரெண்​டானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *