• October 1, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூர் சம்​பவம் தொடர்​பாக பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று பாஜக கூட்​டணி எம்​.பி.க்​கள் குழு தெரி​வித்​துள்​ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்​க​வும், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவிக்​க​வும் பாஜக எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர், தேஜஸ்வி சூர்யா மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி எம்​.பி.க்​கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்​து, பாஜக தேசி​யத் தலை​வர் ஜே.பி. நட்டா உத்​தர​விட்​டார்.

அதன்​படி, ஹேம​மாலினி தலை​மையி​லான குழு​வினர் நேற்று கரூர் வந்​தனர். அவர்​கள், வேலு​சாமிபுரத்​தில் சம்பவ இடத்தை ஆய்வு செய்​ததுடன், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை​யும், காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்​களை​யும் சந்​தித்து ஆறு​தல் கூறினர்.

பின்​னர், எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர் ஆகியோர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை சந்​தித்​த​போது, அவர்​கள் கூறு​வதைக் கேட்டு தாங்க முடி​யாத வேதனை ஏற்​பட்​டது. நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யும் அரசி​யல் கட்​சி​யினர் சரி​யான இடங்​களை தேர்வு செய்​ய​வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *