• September 30, 2025
  • NewsEditor
  • 0

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.

கரூர், விஜய்

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரித்திருந்த தவெக விஜய், வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, “கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கல. ஆனால், கரூர் மாவட்டத்துல மட்டும் ஏன் இப்படி நடந்துச்சு?

CM சார் உங்களுக்கு எதாவது பழி வாங்கணும்னு எண்ணம் இருந்தா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க, எங்க கட்சித் தோழர்கள் மேல கை வைக்காதீங்க” என்று பேசியிருக்கிறார். மேலும் இந்தச் சம்பவத்தில் தனக்கு ஆதரவாக, ஆறுதலாகப் பேசியிருந்த அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?

  • ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன?

  • இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா?

ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான். மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *