
நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார்.
கடந்த ஜூன் மாதம் பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ரேஸ் டிராக்கில் நடைபெற்ற உலகளாவிய கார் பந்தயத்தில், அஜித் குமார் தலைமையிலான டீம் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
ஃபெராரி, லம்போகினி, போர்ஷே, பி.எம்.டபள்.யூ ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டிப்பார்த்த அஜித், போர்ஷேவில் 911 GT3 RS எனும் ஸ்போர்ட்ஸ் காரை தேர்வு செய்து, கடந்த எல்லா ரேஸிலும் பயன்படுத்தி வந்தார்.
அடுத்ததாக ஆசிய லீ மான்ஸ் (Asian Le Mans Series) தொடரில் களமிறங்க, இப்போது புதிய ரேஸ் கார் ஒன்றை தயார் செய்து வருகிறார் அஜித். இந்த லீ மான்ஸ் தொடர் கொஞ்சம் வேறுபட்டது. இதில் LMP2, LMP3, GT3 வகை கார்கள்தான் பங்கேற்கின்றன.
இதற்காகத்தான் அஜித் இந்த LMP3 (Le Mans Prototype 3) காரை தயார் செய்து வருகிறார். இந்த வகை கார்கள் முழுக்க முழுக்க ரேஸுக்காக அதிக வேகத்தில், காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல பிரத்தேகமாக வடிவமைக்கப்படுபவை.
An exciting reveal!
Presenting the LMP3 for the upcoming Asian Le Mans Series.
A warm welcome to Narain Karthikeyan, back on track again, from all of us at Ajith Kumar Racing.Stay tuned and watch this space for more exciting reveals soon! ✨#AjithKumarRacing #AsianLeMans… pic.twitter.com/9aJ7SzeBwR
— Suresh Chandra (@SureshChandraa) September 30, 2025
இதன் என்ஜின் 3.5 லிட்டர் ட்வின்-டர்போ V6, மணிக்கு 290 கி.மீ வேகம் வரை சீறிப்பாயும். அதேசமயம் குறைந்த வேகத்தில் அதிக பவர், பிரேக்கிங் என கை கட்டுப்பட்டுக்குள் எளிதாக வந்துவிடும். காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல எடை குறைவாக கார்ப்பன் ஃபைபர் மெட்டீரியலால் 950 கிலோவில் செய்யப்படுபவை இந்த வகை கார்கள்.
2025-இல் புதிய இன்ஜின்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் என முந்தைய ஜெனரேஷனைவிட இந்த LMP3 கார் பவர்புஃலாக இறங்கியிருக்கிறது. இந்தக் காரில்தான் அஜித் டிசம்பர் மாதம் வரப்போகும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கப்போகிறார்.