
முசாபராபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்குழு அமைப்பின்(ஏஏசி) சார்பாக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரை அரசு குவித்துள்ளது. மேலும், அங்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.