
சென்னை: அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் சார்பில் மாதம்தோறும் ரூ.8,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.