
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக 50 சுற்றுலா தலங்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மூடியது.
இந்நிலையில் விரிவான பாதுகாப்பு மறுஆய்வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்றுலாத் தலங்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஸ்ரீநகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.