
மதுரை: தவெக வழக்கறிஞர் அறிவழகன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது போலீஸார் போக்குவரத்தை சீர்செய்யவில்லை. பாதுகாப்புக்கு போதுமான காவலர்களை நியமிக்கவும் இல்லை. கரூர் கூட்டத்தில் போலீஸார் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியால் 41 பேர் உயிரிழந்தனர். அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் தயாராக உள்ளார். ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்கும். புலன் விசாரணை நடத்த முடியாது.