
கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுகுணா (65) சிகிச்சை பலனின்றி இன்று (செப். 29ம் தேதி) அதிகாலை மரணமடைந்தார். இதனால் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிசிச்சையில் இருந்த கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த கவின் (34) சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 40ஆக நேற்று அதிகரித்தது.