
திருமலை: திருப்பதி ஏழுமலையானின் தங்க ரதம் 28 டன் எடையில், 32 அடி உயரம் கொண்டதாகும். ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பக்தர்கள் இதனைக் காண இயலும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஆண்டாண்டு காலமாக தேர்த் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு பிரம்மோற்சவத்திலும் தேர்த்திருவிழா 8-ம் நாள் காலை பிரம்மாண்டமான முறையில் மாட வீதிகளில் உலா வரும்.அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் பக்தர்களுக்கு அருள் புரிவது ஐதீகம். ஆனால், இத்துடன் ஒரு வெள்ளி தேரையும் திருப்பதி தேவஸ்தானத்தின் உருவாக்கினர். அந்தத் தேரில் பிரம்மோற்சவ நாட்களில் உற்சவ மூர்த்திகள் 6-ம் நாள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.