
சென்னை: வேதனைக்குரிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். நெரிசல் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.