• September 29, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தைப் பொறுத்தவரை ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையும், இன்னொருபக்கம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

கரூர் சோகம்

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த சகாயம், த.வெ.க-வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் ஆகிய மூன்று பேரை போலீஸ் கைதுசெய்தது.

இந்த நிலையில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் போலீஸாரால் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *