
சென்னை: 'கரூர் துயர சம்பவத்துக்காக தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும்' என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்த கருத்துக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அன்பில் மகேஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ், நாகரிகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சுக் குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!