
சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு தொலைக்காட்சி நேரலையில் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிண்டூ மகாதேவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு தொலைக்காட்சி நேரலையில் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிண்டூ மகாதேவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.