
புதுடெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து ஆராயவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கவும் 8 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். ஹேமமாலினி எம்பி தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.