
மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.
மதுரையில் தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளில் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது என எங்கள் மனுவில் கூறியுள்ளோம். எனவே காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.