
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீத கல்விக் கட்டண விலக்கு தர ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உட்பட உயர்கல்விக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ‘சென்டாக்’ மூலம் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்கல்விக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.