
திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இணைந்து இந்த தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளன. அந்த தீர்மானத்தில், "கேரளாவில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தவறான செயல். அதோடு, கடந்த 2002-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆவணத்தை அடிப்படையாக வைத்து சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பது அறிவியல்பூர்வமானது அல்ல.