• September 29, 2025
  • NewsEditor
  • 0

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் சுயசரிதையான “ஐ ஆம் ஜியோர்ஜியா – மை ரூட்ஸ், மை பிரின்சிபிள்ஸ்” என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இந்திய பதிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரையில், “இந்தப் புத்தகம் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் மன் கி பாத். இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைக்கும் பொது வாழ்க்கைக்குமான ஒரு தொடர்பை விளக்குகிறது. மெலோனி சிறந்த தேசபக்தர் மற்றும் சிறந்த சமகாலத் தலைவர். அவருக்கு என் மரியாதையையும், பாராட்டையும், நட்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மெலோனி – மோடி

கடந்த 11 ஆண்டுகளாக உலகத் தலைவர்களுடனான எனது தொடர்பின் மூலம் அறிந்துகொண்டதில் முக்கியமானது, அவர்களின் கதைகள் பெரும்பாலும் ஆழமான, உலகளாவிய கருப்பொருள்களைப் பிரதிபலிக்கின்றன. பிரதமர் மெலோனியின் வாழ்க்கையும் தலைமைத்துவமும் காலத்தால் அழியாத உண்மைகளை நமக்கு நினைவூட்டுகின்றன… (இந்தியாவில்) ஒரு சிறந்த சமகால அரசியல் தலைவர் மற்றும் ஒரு தேசபக்தரின் புத்துணர்ச்சியூட்டும் கதையாக நல்ல வரவேற்பைப் பெறும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *