
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது…
2 வயது பாலகன்: கரூர் வேலுசாமிபுரம் வடிவேல் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி விமல் (25). இவரது மனைவி மாதேஸ்வரி (22). பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர். இவர்களது ஒரே மகன் குரு விஷ்ணு. ஒரு வயது 10 மாதம். சம்பவத்தன்று விமலின் சகோதரி லல்லி, அவரது கணவர் பசுபதி (32) ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன், குரு விஷ்ணுவையும் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது கூட்ட நெரிசலில் லல்லியின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்த குரு விஷ்ணு, கூட்டத்தில் மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.