• September 29, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா.

இதன் மூலம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிடும் என்று கணக்கு போட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தியாவின் நிலைப்பாடு

ஆனால், அது நடக்கவில்லை. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதன் அளவுதான் குறைந்துள்ளது.

‘இந்திய தேசத்திற்கும், இந்திய மக்களின் நலனுக்கும் எது நல்லதோ, அதைத்தான் இந்தியா தொடர்ந்து செய்யும்’ என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஜெய்சங்கர் பேச்சு

சமீபத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்கா தங்களது எண்ணெயை இந்தியாவிடம் விற்க நினைக்கிறது. இது குறித்து ஆலோசிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால், ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் இருந்து என்ன வாங்குகிறோம் என்பது இந்தியாவின் முடிவு. அதற்கும் இந்தியா – அமெரிக்க உறவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யாவின் பாராட்டு

ஜெய்சங்கரின் இந்தப் பேச்சை ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஐ.நா சபையில் பாராட்டியிருக்கிறார்.

அவர் பேசியதாவது…

“ஜெய்சங்கரின் இந்தப் பேச்சு தக்க பதிலடி. இது துருக்கியைப் போல, இந்தியாவிற்கு சுய மரியாதை இருக்கிறது என்பதை காட்டுகிறது.

இந்திய – ரஷ்ய உறவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த உறவிற்கு ஏதாவது பிரச்னையை ஏற்படுத்த பிறர் முயன்றால், ‘இந்தியா தனது கூட்டாளியைத் தானே தேர்ந்தெடுக்கும்’ என்பதை இந்திய பிரதமரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் தெளிவுப்படுத்திவிட்டனர்.

Sergei Lavrov | செர்ஜி லாவ்ரோவ்
செர்ஜி லாவ்ரோவ்

அமெரிக்கா இந்தியா – அமெரிக்க உறவை வலுப்படுத்த விரும்பினால், அமெரிக்கா முன்னிறுத்தும் விதிமுறைகளை இந்தியா ஆலோசிக்க தயாராக இருக்கிறது.

ஆனால், வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், ராணுவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவிற்கும், பிற நாடுகளுக்கும் ஒப்பந்தம் உண்டானால், இந்தியா அந்தந்த நாடுகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடும்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *